ஐஓஎஸ் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ஒரு புதிய பீட்டா புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. அந்த புதிய வெர்ஷன் நிறைய மாற்றங்களைக் கொண்டுள்ளது. 3D டச் பயன்படுத்தி சுயவிவரப் படத்தைச் சேமிக்கும் திறனை நீக்குதல், அரட்டைகளில் பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களுக்கான நோட்டிபிகேஷன் மற்றும் குயிக் மீடியா எடிட் (Quick Media Edit) அம்சம் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை.
இப்போது பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகியுள்ள இந்த அம்சங்களை, விரைவில் வாட்ஸ்ஆப் அப்டேட்டில் எதிர்பார்க்கலாம். வாட்ஸ்ஆப் அம்சங்களை பிந்தொடரும் WABetaInfo நிறுவனமோ ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஒரே கணக்கை இயக்கும் வசதியை வாட்ஸ்ஆப் கொண்டு வரவுள்ளது.

வாட்ஸ்ஆப், டெஸ்ட்ஃப்லைட் பீட்டா சோதனையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐஓஎஸ் புதுப்பிப்புக்கான வாட்ஸ்அப் வெர்ஷன் 2.19.80.16-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. மாற்றங்களைப் பற்றி பேசுகையில், வாட்ஸ்அப் 3D டச் புகைப்படத்தை சேமிக்கும் திறனை நீக்குதல் அம்சத்தை இந்த புதிய வெர்ஷன் கொண்டுள்ளதாக WABetaInfo-வின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அரட்டைகளில் பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்யவும், அது குறித்த நோட்டிபிகேஷன்களை அளிக்கும் வசதிகளை இந்த புதிய வெர்ஷனில் வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.