Apps

இந்த மொபைல்களில் நவம்பர் 1 முதல் வாட்ஸ் ஆப்பினைப் பயன்படுத்தத் தடை!

வாட்ஸ்அப் செயலியானது உலக அளவில் பேஸ்புக்கினை அடுத்து அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு செயலியாகும். வாட்ஸ் ஆப் செயலியானது பயனர்களால் அதிக அளவில் விரும்பப்படும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி சமீபத்தில் ஒரு சிறப்பான அம்சத்தினை வாட்ஸ் அப் வழங்கியது. அதாவது வாட்ஸ் ஆப் வெப்பில் தற்போது பாதுகாப்பினை அதிகரிக்கும் வகையில் பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் வசதியானது வழங்கப்பட்டது.

இந்த மொபைல்களில் நவம்பர் 1 முதல் வாட்ஸ் ஆப்பினைப் பயன்படுத்தத் தடை!

அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதாவது வாட்ஸ் அப் செயலியினை இனி ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.

மேலும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ள பயனர்கள் மட்டுமே வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது ஆப்டிமஸ், ZTE கிராண்ட், அஸெண்ட், சாம்சங் போன்ற பிராண்டுகளின் சில மொபைல்களில் நவம்பர் 1 முதல் வாட்ஸ் அப் செயலியினைப் பயன்படுத்த முடியாது.

Related posts

ட்ரூ காலர் மீது அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

ஜூம் செயலி போனால் என்ன? இதோ வந்துடுச்சு கூகுளின் ஹேங்அவுட்ஸ் மீட்!

TechNews Tamil

6 மாசம் வெயிட் பண்ணுங்க… ரெடியானது வாட்ஸ் ஆப் பே!!

TechNews Tamil