Apps

இலவசமாக நெட்பிளிக்ஸினைப் பயன்படுத்தலாம்… பயனர்கள் மகிழ்ச்சி!!

நெட்பிளிக்ஸ் அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஊடக சேவை வழங்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனமாகும். இந்நிறுவனமானது சீனா, சிரியா, வட கொரியா, ஈரான் மற்றும் கிரிமியா, நெதர்லாந்து, பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

சமீபத்தில் ஊரடங்கினால் வீட்டிற்குள் மாணவர்கள் அடங்கியிருக்கும் இந்த நிலையில் நெட்பிளிக்சு  புதிய முயற்சியாக  யூடியூப் சேனலில் Our Planet and Explained போன்ற சில டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் சீரீஸ்களை இலவசமாக வழங்கியது.

இலவசமாக நெட்பிளிக்ஸினைப் பயன்படுத்தலாம்… பயனர்கள் மகிழ்ச்சி!!

ஊரடங்கு காலத்தில், நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஆசிரியர்களை தங்கள் வகுப்பறைகளில் ஆவணப்படங்களை திரையிட அனுமதித்துள்ளதையடுத்து தற்போது ஆசிரியர்களின் வேண்டுகோளின் பேரில் Netflix US YouTube சேனலில் எங்கள் டாக்குமெண்டரி பீச்சர் மற்றும் தொடர்கள் இலவசமாக கிடைக்கும் என சமீபத்தில் நெட்பிலிக்ஸ் அறிவித்தது.

இந்தநிலையில் தற்போது நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு இலவச ஸ்ட்ரீமிங்க் திட்டமாக டிசம்பர் 5 நள்ளிரவு 12 மணி துவங்கி டிசம்பர் 6 இரவு 12 மணி வரை இரு நாட்களுக்கு நெட்ஃபிளிக்ஸை இலவசமாக பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

Related posts

6 மாசம் வெயிட் பண்ணுங்க… ரெடியானது வாட்ஸ் ஆப் பே!!

TechNews Tamil

சோதனையில் இருந்துவரும் டெலிகிராம் செயலியின் வீடியோ காலிங்க் அம்சம்!!

TechNews Tamil

பிக் பாஸ்கெட்டுடன் இணைந்து ஊபெர் கொண்டுவந்துள்ள கட்டணமில்லா சேவை…

TechNews Tamil