அமெரிக்காவில் பிற நாடுகளில் இருந்து எச்1 பி விசா மூலம் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான நபர்களுக்கு வேலைவாய்ப்பானது வழங்கப்படுகிறது. அதாவது எச்1 பி விசா என்பது அமெரிக்காவில் வேலைபெற பலரும் பெற நினைக்கும் கனவான விஷயமாகும்.
அதாவது அமெரிக்காவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்குள்ள அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால் அதிக அளவில் செலவாகும், மேலும் பிற நாட்டினருக்கு குறைவான ஊதியத்தில் இந்த விசாமூலம் வேலைவாய்ப்பானது வழங்கப்பட்டு வருவதால் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பானது கிடைப்பது கடினமானதாக உள்ளது.
இதனால் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்1 பி விசா விஷயத்தில் பலவகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் இந்த விதிமுறையினைக் கருத்தில் கொள்ளாமல் பேஸ்புக் நிறுவனம் பணிகளை வழங்குவதால் அமெரிக்க அரசு பேஸ்புக் நிறுவனத்தின்மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை சார்பில் இதுகுறித்து 2 ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதாவது அமெரிக்க தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் எச் 1 ப் விசா வைத்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து அமெரிக்காவின் சட்டத்தை மீறியதாக பேஸ்புக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.