விண்கல் போன்று தோற்றத்தில் புதிய வீடுகளை கட்டி கொடுக்கின்றது அமெரிக்கா
கட்டுமான நிறுவனம்.
இவை விதவிதமான நிறங்களில் கட்டிக் கொடுப்பதால், நம் கண்களை கவரும் விதமாகவும், விருந்தளிக்க கூடியதாகவும் இருக்கின்றது.
விண்கற்கள் போன்று, வீடுகளை கட்ட அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் Airbnb (ஏர்பிஎன்பி) என்ற நிறுவனமானது இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

வீடுகளை கட்டியுள்ள நிறுவனம்: அப்போலோ 11 விண்கலத் திட்டத்தின் 50ஆவது நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ஏர்பிஎன்பி என்ற நிறுவனமானது, விண்கலன்கள் வடிவில் உருவாக்கியுள்ள வீடுகள், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
இதை கெளரவிக்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் நிறுவனமான ஏர் பிஎன்பி, அப்போலோ 11, பறக்கும் தட்டுகள் போன்றவற்றின் வடிவில் 5 வீடுகளை வடிவமைத்துள்ளது.
விண்கற்கள் வீடுகளில் ஒருநாள் இரவு தங்குவதற்கு இந்திய மதிப்பில் 750 ரூபாய் என்ற மிகக்குறைந்த கட்டணத்தை அந்த நிறுவனம்
நிர்ணயித்துள்ளது. கலிபோர்னியாவின் டிவெண்டி நைன்
பால்ம்ஸ், ஸ்காட்லாந்து,
நியுசிலாந்தின் புகாக்கி
ஆகிய இடங்களில், இயற்கை எழில் சூழ்ந்த
பகுதிகளில், அந்த வீடுகள்
கட்டமைக்கப்பட்டுள்ளன.