ஆன்லைன் விற்பனை தளங்களில் பிரபலமான நிறுவனம் அமேசான், எத்தனை ஆன்லைன் விற்பனை தளங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும், இதனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல.
காரணம் அனைத்துவிதமான சேவைகளையும் வழங்குகிறது, அத்துடன் கூடுதலாக விழாக்கால ஆஃபர்களை வாடிக்கையாளர்களே போதும் என்று சொல்லுகிற அளவு அள்ளி வீசுகிறது.
இந்த தளத்திற்கு இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிக ஆதரவு இருந்து வருகிறது. தற்போது இந்திய விற்பனையாளர்களை கவரும் வகையில் பல சேவைகளை வழங்கி அர்பன் கிளப் முயற்சித்து வருகிறது. இதற்காக மனிதனின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறது க்ளப்.

விற்பனையாளர்களுக்கு பொருட்கள் விற்பது, சலுகைகள் வழங்குவது போன்றவற்றுடன் வீட்டு வேலைகளை வீட்டிலேயே வந்து செய்து கொடுப்பது போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது பாத்ரூம் கழுவுதல், முடி வெட்டுதல், சிகை அலங்காரம் செய்து விடுதல், இதர பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் கொடுப்பது என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் மற்றும் அன்றாடத் தேவைகளை வீட்டில் கொண்டு வந்து சேர்க்கும் திட்டங்களுடன் வெளிவந்துள்ளது.