Apps

இனி வீடியோ காலிங்கில் 8 பேர் வரை பங்கேற்கலாம்… வாட்ஸ் ஆப்பின் புதிய அம்சம்!!

பேஸ்புக்கினை அடுத்து, அதிக அளவில் பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக வாட்ஸ்ஆப் செயலி இருந்து வருகிறது.

போலியான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வாட்ஸ் ஆப் ஒரு புதிய சேவையினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அதனையடுத்து வாட்ஸ் ஆப் சமீபத்தில் ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே சாட்களை/ குறுந்தகவல்களை Forward செய்யும் வரம்பைக் கொண்டுவந்தது.

சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் நான்கு பேருக்கு மேல் வீடியோ அழைப்பில் சேர அனுமதிக்கும் சேவையினை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் அதனை இந்த மாத இறுதிக்குள் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அறிவித்தது.

இனி வீடியோ காலிங்கில் 8 பேர் வரை பங்கேற்கலாம்… வாட்ஸ் ஆப்பின் புதிய அம்சம்!!

ஜூம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் வாட்ஸ் ஆப்பானது 4 பேருக்கு மேல் வீடியோ அழைப்பில் சேர அனுமதிக்கும் புதிய அம்சத்தை எப்போது கொண்டுவரும் என ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தனர்.

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் அந்த அம்சத்தினை வெளியிட்டுள்ளது. அதிலும் இந்த அம்சத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் மேற்கொள்ளும் போது எட்டு பேர் இனி பங்கேற்கலாம்.

இந்த அம்சமானது வாட்ஸ்அப்  ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா பதிப்புகளில் வெளியாகி உள்ளது.

Related posts

அமேசானின் 5 வது ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கான விற்பனை ஆரம்பம்!!

TechNews Tamil

‘ஃப்ளிப்கார்ட்’ புதிய கிரடிட் கார்டு அறிமுகம்!

TechNews Tamil

ஃபேஸ்புக் மெசஞ்சர் ஐஒஎஸ் பதிப்பில் ப்ரோஃபைலை லாக் செய்யும் வசதி!!

TechNews Tamil