கொரோனா ஊரடங்கால் பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்த ஜூம் செயலி பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு தொடர்ந்து ஆளானது. மேலும் அடுத்த கட்டமாக, பாதுகாப்புரீதியான பிரச்சினைகளை சந்தித்ததால், சிங்கப்பூர், மலேசியா உட்பட பல நாடுகளில் இதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது.
இந்தநிலையில் கூகுள் நிறுவனத்தின் டுயோ மூலம் வீடியோ கால்கள் பயன்பாட்டினை தற்போது பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் டுயோ குறித்த ஒரு சிறப்புமிக்க அம்சம் தற்போது வெளியாகியுள்ளது, அதாவது இதன் வீடியோகால் லிமிட் 32 நபர்கள்வரை பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கூகுள் டுயோ மூலம் வீடியோ காலில் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக 8 ஆகவும், அதிகபட்சமாக 12 ஆகவும் இருந்தது. தற்போது பலவிதமான வீடியோ ஆப்புகளிலும் வீடியோ காலிங்கில் பேசுவோர் எண்ணிக்கையானது தற்போது அதிகமாகி உள்ள நிலையில், கூகுள் டுயோவிலும் புதுப்பிப்பு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது கூகுள் டுயோ செயலியில் ஒரே நேரத்தில் 32 பேர் வரை வீடியோ கால் மேற்கொள்ள முடியும்.
மேலும் இந்த அறிவிப்பினை கூகுள் டுயோ வடிவமைப்பின் மூத்த இயக்குனர் சனாஸ் அஹரி லெமெல்சன் அவரது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.