Information Technology

இனி அன்லிமிடெட் எஸ்எம்எஸ்கள்— டிராய் அதிரடி!!

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவை சமீப காலமாக டிராய் விதித்துள்ள விதிமுறைகளின்படி பல வகையான வரம்புகளை விதித்து வருகிறது.

அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்எம்எஸ்கள், டேட்டா என அனைத்து நிறுவனங்களும் அவர்களின் வரம்பினை அமலுக்கு கொண்டு வந்தனர்.

இதனால் வாடிக்கையாளர்கள் பலரும் இந்த வரம்பினால், அதிருப்திக்கு ஆளாகி வந்தனர்.

இனி அன்லிமிடெட் எஸ்எம்எஸ்கள்— டிராய் அதிரடி!!

சமீபத்தில் ஜியோ நெட்வொர்க் பிற நெட்வொர்க்குகளுக்கான அவுட் கோயிங்க் காலுக்கு கட்டணத்தினை அறிவித்ததால், பலரும் போர்ட் அவுட் செய்ய ஆரம்பித்தனர்.

தற்போது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்த டிராய் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தினமும் 100 எஸ்எம்எஸ் வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

அதாவது உச்ச வரம்பான 100 எஸ்எம்எஸ்க்கு மேல் அனுப்பினால் 50 பைசா வசூலிக்கப்படும் என்பதும் ரத்தாகியுள்ளது.

அதாவது, தொலைத்தொடர்பு கட்டண 54 வது திருத்த ஆணை அறிமுகப்படுத்திய எஸ்எம்எஸ் கட்டணத்திற்கான ஒழுங்குமுறை விதியின்படி விதிக்கப்பட்ட வரம்பையும், கட்டணத்தையும் டிராய் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகியதை அடுத்து, பயனர்கள் பலரும் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related posts

இன்காக்னிடோ மோடில் உள்ள லூப்ஹோல் மூலம் தகவல்கள் திருட்டு..!!!

TechNews Tamil

இப்போதைக்கு இலவச அவுகோயிங்க்தான்- ஜியோ அறிவிப்பு!

TechNews Tamil

இலவச அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் வேண்டும்… மத்திய அரசிடம் மனுத்தாக்கல்!!

TechNews Tamil