ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 தொடரின் மொபைல்கள் பற்றிய அறிவிப்புகள் கடந்தமாதம் வெளியாகின.
தற்போது ஐபோன் 12 பற்றிய தகவல் வெளியாகி அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 11 பொறுத்தவரை 3D Sensor-ஐ இணைக்கும் என்பதால், ஐபோன் 11 மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

ஐபோன் 11 தொடரில் Square camera module என சிறப்புமிக்க அம்சங்கள் இருந்தது. இது புதிய 120fps Slow-Motion வீடியோ ரெக்கார்டிங் ஆதரவையும் கொண்டது.
அதேபோல் ஐபோன் 11 ஆனது 3டி டச் ஆதரவு இல்லாத 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளேவினைக்
கொண்டது.
தற்போது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 புரோ மேக்ஸ்,
போன்ற அனைத்தையும் தாண்டி ஐபோன் 12 வேறு
லெவலாக களமிறங்கவுள்ளது.
எதிர்கால நோக்கத்திற்கு மிகச் சிறப்பாக இது தயாராகி வருகிறது, தற்ஐபோது வர் கசிந்துள்ள தகவலின்படி ஐபோன் 12 மொபைல் கம்ப்யூட்டிங்கின் அடுத்த கட்டத்திற்கு தயாராக இருக்கும் என்று தெரிகிறது.
சிறந்த 5 ஜி ஸ்மார்ட்போன்களை ஒவ்வொரு நிறுவனமும் அறிவித்தன, ஆனால் இன்னும் எதுவும் களம் இறங்கவில்லை.
ஆப்பிள் ஐபோன் 12 கூல் கேலக்ஸி எஸ் 10 ஐ விட மேம்பட்ட அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தெரிகிறது.
வரவிருக்கும் ஐபோன் 12 ஆனது 5 ஜியை ஆதரிக்கும் என்று தகவலை வெளியிட்டுள்ளது ஐபோன். ஐந்தாவது தலைமுறை மொபைல் நெட்வொர்க் மின்னல்-வேக தரவு பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தை உறுதிப்படுத்துகிறது, அதுமட்டுமன்றி பயணத்தின் போது சிறந்த இணைப்பு வசதியையும் வழங்குகிறது.
5 ஜி நெட்வொர்க்குகள் தற்போதுவரை ஐபோன் 11 ப்ரோ போன்ற சில பிரீமியம் தொலைபேசிகளால் கூட சப்போர்ட் பண்ணவில்லை.
5 ஜியுடன் பொருந்தக்கூடிய ஆண்ட்ராய்டு போன்களைப் போலவே, எதிர்காலத்தில் ஐபோன் 12 உம் 5 ஜி நெட்வொர்க்கை ஆதரிக்கும் வகையில் வெளியாகும்.