ஜெர்மனை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான CERT-Bund ஆனது, VLC மீடியா பிளேயரில் ஒரு பாதுகாப்பு குறைபாடு இருப்பதை கண்டறிந்துள்ளது. அந்த குறைபாடு ஆனது, உங்கள் PC-ஐ ஹேக் செய்வதற்கான எளிமையான பாதையை ஹேக்கர்களுக்கு வழங்குமென்றும், அது சாத்தியமாகும் பட்சத்தில் உங்கள் பிசியில் உள்ள அனைத்து கோப்புகளையும் ஹேக்கர்களால் அணுக முடியுமென்றும் CERT-Bund தெரிவித்துள்ளது.
கோப்புகளுக்கான அணுகல்களை மட்டுமின்றி, இந்த பாதுகாப்பு ஓட்டையானது, Remote code execution அல்லது Distributed Denial of Service (DDoS) போன்ற இணையவழி தாக்குதல்களுக்கும் வழிவகுக்குமாம்.

ஏனெனில் VLC Media Player குழுவிடம் இந்த பாதுகாப்பு ஓட்டையை சரிசெய்யும் எந்த இணைப்பும் (தற்போது வரையிலாக) இல்லை. எனவே, VideoLAN (விஎல்சி மீடியா பிளேயர் குழு) குறிப்பிட்ட குறைபாட்டை சரிசெய்யும் வரையிலாக, உங்கள் பிசி ஆனது எளிதில் ஹேக் செய்யப்படக்கூடியதாக அல்லது பாதிக்கப்படக்கூடியதாக தான் இருக்கும்.
விஎல்சியின் அனைத்து விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் பதிப்பும் இந்த பாதுகாப்பு குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றன, ஆனால் மேக்ஓஎஸ் பதிப்பு மட்டும் விதிவிலக்காக உள்ளது. அதாவது விஎல்சியின் மேக்ஓஎஸ் பதிப்பானது மிகவும் பாதுகாப்பானதாக உள்ளது. ஆகையால் மேக் பயனர்கள் இதுசார்ந்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இப்போதைக்கு, இந்த “சிக்கலான” பாதுகாப்பு குறைபாட்டிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி உங்கள் PC-யில் இருக்கும் VLC Media Player-ஐ Uninstall செய்வது மட்டும் தான்.