கொரோனா வைரஸ் டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் ஊடுருவியது. ஏறக்குறைய 2 மாதங்கள் ஆகவுள்ள நிலையில், இது பெரிய அளவிலான தாக்கத்தினை உலக அளவில் ஏற்படுத்தி உள்ளது.
இது மனிதர்களின் வாழ்வில் பெரிய நெருக்கடியினைக் கொடுத்து வருகிறது. உலகம் முழுவதும் 50 சதவிகிதப் பொருட்கள், சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றது.
கொரோனா வைரஸ் சீனாவினை மிகவும் மோசமாக்கியுள்ள நிலையில், பொருட்கள் எதுவும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.

இதனால் பொருட்களின் விலையானது தற்போது பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
அதிலும், பிரிட்ஜ், வாஷிங்க் மெஷின், ஸ்மார்ட்போன், ஏசி, போன்ற எலெக்ட்ரானிக் உபகரணங்களின் விலையானது தாறுமாறான விலை உயர்வினை சந்தித்து உள்ளது.
அதேபோல் முகமூடிகள் முதல் சானிடைசர்கள் வரை உலகம் முழுவதும் வரலாறு காணாத அளவில் விற்பனையாகி வருகிறது.
தேவை இருந்தபோதிலும் சீனப் பொருட்களை மக்கள் வாங்க பயப்படும் காரணத்தினால், மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களின் விலை கூடுதலாக இருப்பதுடன், இறக்குமதி அளவும் வெகுவாகக் குறைந்துள்ளது.
ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியினை சந்தித்துவரும் இந்தியாவுக்கு, தற்போது தொழில்கள் முற்றிலும் நலிவடைந்துள்ளது.