ஜியோவுக்கு போட்டியாக அனைத்து நெட்வொர்க்குகளும் ஏதாவது ஒருவழியில், ஏதாவது ஆஃபரை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திடீரென டாடா ஸ்கை அதன் செட்-டாப் பாக்ஸ் விலையினைக் குறைத்தது.
அடுத்து அதற்கு போட்டியாக டிஷ் டிவியும், புதிய வாடிக்கையாளர்களுக்கு எச்டி எஸ்டிபிகளின் விலையை குறைத்தது. அது மக்களிடம் சிறப்பான வரவேற்பினைப் பெற, தற்போது, ஏர்டெல் டிஜிட்டல் டிவிக்களும் ஆஃபரை அறிவிக்க முன் வந்துள்ளன.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி எச்டி செட்-டாப் பாக்ஸை புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,300 க்கு வழங்கி வருகிறது, ஆனால் ஒரு எஸ்டி செட்-டாப் பாக்ஸ் விலை ரூ.1,100 ஆகும்.

டாடா ஸ்கை எச்டி எஸ்டிபிக்கு ரூ.1,499 ஆகும் மற்றும் எஸ்டி எஸ்டிபிக்கு ரூ.1,399 ஆகும். ஆண்ட்ராய்டு டிவிக்களுக்கு டிஷ் டிவி, அதன் புதிய வாடிக்கையாளர்களுக்கு Dish NXT HD STB என்பதனை ரூ.1,590 க்கு வழங்குகிறது.
டாடா ஸ்கை அதன் எச்டி
எஸ்டிபிக்கு ரூ.1,499
யும், எஸ்டி எஸ்டிபிக்கு ரூ.1,399 என்ற விலையையும் வசூலிக்கிறது.
டிஷ்என்எக்ஸ்டி
எச்டி செட்-டாப் பாக்ஸ் தற்போது ரூ.1,590 வசூலிக்கிறது. கூடுதலாக எஸ்.டி.பி. உடன் வாழ்நாள்
உத்தரவாதத்தையும் அளிக்கிறது, இது மற்ற ஆஃபர்களைவிட அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.