உபெர் நிறுவனம் போக்குவரத்து சேவைகளை வழங்கி வந்தநிலையில், ஸ்விக்கி, சொமோட்டோ போன்று உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யும் சேவையினைத் துவக்கியது.
ஊபெர் ஈட்ஸ் என்னும் இந்த சேவை கடும் போட்டிகளுக்கு இடையேயும் குறுகிய காலத்தில் லாபத்தினை சம்பாதிப்பதாக இருந்து வருகிறது.
தற்போது இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சொமோட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து வரும் நிலையில், ஊபெர் ஈட்ஸும் இந்த சேவையினை ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து விநியோகம் செய்ய இருக்கிறது.
அதாவது ஊபெர் நிறுவனம் பிக் பாஸ்கெட் உடன் இணைந்து மக்களுக்கு தேவையான பொருட்களை எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் விநியோகம் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது.

சேவையின் மூலம் கிடைக்கும் வருவாய் ஓட்டுனர்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ள்து.
மேலும் அனைத்து ஓட்டுனர்களும் மாஸ்க், க்ளவுஸ் போன்று விழிப்புணர்வோடு செயல்படுவார்கல் என்றும் ஊபெர் தெரிவித்துள்ளது.
இந்த சேவை முதற்கட்டமாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற 3 நகரங்களில் மட்டுமே அமலாகிறது. அதன்பின்னர் படிப்படியாக மற்ற நகரங்களில் சேவை துவக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.