சாம்சங் நிறுவனம் க்ரோம்புக் 4 மற்றும் க்ரோம்புக் 4பிளஸ் என்ற இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவில் தற்போது வெளியாகி உள்ள இந்த லேப்டாப் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர்.
- சாம்சங் க்ரோம்புக் 4 லேப்டாப் மாடலின் விலை – ரூ.16,400
- சாம்சங் க்ரோம்புக் 4பிளஸ் லேப்டாப் மாடலின் விலை -ரூ.21,400

இது மலிவான விலை என்பதால், அதிக அளவிலான வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இதில் உள்ள கூகுள் அசிஸ்டென்ட் அம்சம் பலரைக் கவர்ந்துள்ளது.
க்ரோம்புக் 4 லேப்டாப் ஆனது 11.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1366×768 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் க்ரோம்புக் 4பிளஸ் லேப்டாப் ஆனது 15.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1920×1080 பிக்சல் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
க்ரோம்புக் 4 லேப்டாப் இன்டெல் செலரான் என்4000 பிராசஸரையும், க்ரோம்புக் 4பிளஸ் யுஎச்டி கிராபிக்ஸ் 600 பிராசஸரையும் கொண்டு இயங்குகிறது.
4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதிகளைக் கொண்டுள்ளது.