உலக அளவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று, ட்விட்டர் ஆகும். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மட்டுமின்றி ட்விட்டரும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு சேவையாகும்.
தற்போது ட்விட்டர் மீது பயனார்கள் பல சர்ச்சைகளைக் கொண்டிருக்கின்றனர், அதாவது ட்விட்டர் பயனர் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக ட்விட்டர் நிறுவனம் “வலைதள செட்டிங் காரணமாக இந்த பிழை ஏற்பட்டு விட்டதாக தெரிவித்திருக்கிறது.

தளத்தில் இருந்த பிழைகள் சமீபத்தில் கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் யார் யார் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.
ட்விட்டர் பயன்படுத்திய விவரங்களில் பயனரின் தேசிய குறியீடு, அவர்களது பயன்பாட்டு விவரங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் சாதனங்களின் விவரங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது.
மேலும் இது போன்ற தவறுகள் வரும் காலத்தில் நடக்காது என ட்விட்டர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் பயனர் விவரங்களை விளம்பர நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, இதனால் தற்போது பலரும் ட்விட்டர் பயன்படுத்த தயங்குகின்றனர்.