கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐடி சார்ந்த நிறுவனங்கள் அலுவலகங்களைத் திறக்கவில்லை என்றாலும், அவர்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி ஊழியர்களும் கடந்த 2 மாத காலமாக தங்களது நிறுவனங்களுக்கு வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். அதன்படி பணியாற்றிவரும் நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் அலுவலகங்களைத் திறக்க செப்டம்பர் மாதம் ஆகும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் ரீதியான ஊரடங்கு முடிந்தாலும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது.

. இது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “எங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணி செய்வதால், நிறுவனம் எந்தவகையிலும் பாதிப்படையப் போவதில்லை, இதனால் எங்கள் ஊழியர்கள் ஊரடங்கின் பின்னர் வீட்டிலிருந்தபடியே பணி செய்ய நினைத்தால் அவர்கள் செய்யலாம்.
அலுவலகங்கள் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டாலும், ஊழியர்கள் தாங்கள் அலுவலகம் வர நினைத்தால் வரலாம். இல்லையேல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.