Apps

டிக் டாக் நிறுவனத்தை வாங்க பேச்சு வார்த்தை நடத்திவரும் டிவிட்டர்!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து இடைக்காலத் தடைவிதிப்பிற்கு ஆளாக்கப்பட்டாலும் அதற்கென தீவிர பயனர்கள் இருந்து வந்தனர்.

இந்திய- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக தடைசெய்யப்பட்ட செயலிகளில் டிக் டாக் செயலியும் ஒன்றாகும். இந்தியாவில் டிக் டாக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது.

இவ்வாறு செயலிகள் தடைசெய்யப்பட்டதால் டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டேன்ஸ் ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளது.

டிக் டாக் நிறுவனத்தை வாங்க பேச்சு வார்த்தை நடத்திவரும் டிவிட்டர்!!

அதாவது இந்த தடையானது 45 நாளில் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அமெரிக்காவின் எந்த நிறுவனமும் பைட்டான்சுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க உள்ளது.

இந்தநிலையில் டிக் டாக்கினை அமெரிக்காவின் ஏதாவது ஒரு நிறுவனம் வாங்கும்பட்சத்தில் இந்தத் தடையானது விலக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மைக்ராசாப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாகவும் அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் டிக்டாக்கினை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.

Related posts

வாட்ஸ்ஆப்பில் வந்த புதிய அப்டேட் – ஃபிங்கர் பிரின்ட் லாக் !

TechNews Tamil

ஸ்டிரீமிங்க் ஆகாமல் போன யுடீயூப் வீடியோக்கள்.. வருத்தம் தெரிவித்த யுடீயூப் நிறுவனம்!!

TechNews Tamil

ட்விட்டரில் ரீட்விட் செய்யும் போது கருத்துகளை பதிவிடலாம்!!

TechNews Tamil