Information Technology

பாஸ்டேக் வைத்துள்ளவர்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம்… அதிர்ச்சி தகவல்!!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் ‘ஃபாஸ்டேக்  மூலம் டோல்கேட் வாகனங்களுக்கான டோல்கேட் நுழைவு பணத்தினை வசூலித்து வருகிறது, இந்தத் திட்டத்தினை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடைமுறைப்படுத்தியது.

இதற்கான ஃபாஸ்ட்டேக்குகளை அரசாங்கம் நெடுஞ்சாலை டோல் பிளாசாக்கள், போக்குவரத்து அலுவலகங்கள், பொதுவான சேவை மையங்கள், போக்குவரத்து மையங்கள், பெட்ரோல் பம்புகள் போன்ற இடங்களில் விற்பனை செய்து வந்தது.

மத்திய அரசு பலமுறை அறிவித்த போதிலும், ஃபாஸ்டேக்கினை வாங்கிப் பயன்படுத்தாமல் வாகன ஓட்டிகள் தாமதப்படுத்தி வந்தனர். அந்த வகையில், ஃபாஸ்டேக் இல்லாமல் ஃபாஸ்டேக் பாதைகளில் நுழைபவர்களுக்கு அபராத்ததினை டோல்கேட்டில் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது பாஸ்டேக் வைத்துள்ளவர்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

அதாவது செல்லாத பாஸ்டேக் வைத்திருப்போர் லேனில் நுழைந்தால், அவர்களின் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபராதமானது வாகனத்தின் வகையைப் பொறுத்து, வசூலிக்கப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

20 நாட்களுக்கு பிஎஸ்என்எல் பிளான் நீட்டிப்பு.!

TechNews Tamil

அசத்தலான திட்டங்களை அறிவித்துள்ள ஏர்டெல்!!

TechNews Tamil

கட்டண உயர்வு குறித்து பி.எஸ்.என்.எல். எடுத்த அதிரடி முடிவு!!

TechNews Tamil