சியோமி, எல்ஜி நிறுவனங்களுக்கு போட்டியாக தான் ட்ரூவிஷன் நிறுவனம் மலிவு விலையில் தனது ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது ட்ரூவிஷன் நிறுவனம்.
மேலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் டிவி மாடல் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.
32-இன்ச் ட்ரூவிஷன் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 16:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்த சாதனத்தின் இணைப்பு ஆதரவுகளை பற்றி பேசுகையில், விஜிஏ-அவுட்புட், 2யுஎஸ்பி போர்ட், ஆடியோ-வீடியோ அவுட்புட், 2எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்.எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளது. மேலும் செல்போன் மற்றும் கீபோர்ட் சாதனங்களை கூட இந்த ஸ்மார்ட் டிவியுடன் இணைத்து பயன்படுத்த முடியும்.
புதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி மாடலின் மென்பொருள் அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி ஆண்ட்ராய்டு இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது,
மேலும் கூகுள் பிளே ஸ்டோர்களில் உள்ள வீடியோ செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். பின்பு எப்போதும் போல் சாதரண ரீமோட் மட்டுமே இந்த ஸ்மார்ட் டிவி மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ட்ரூவிஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய ஸ்மார்ட் டிவி சிறந்த கலர் அம்சம் மற்றும் திரைஅனுபவம் கொடுக்கும் வகையில் வெளிவந்துள்ளது, ஆனால் சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ள பேக்லைட் அம்சம் மற்றும் சில அம்சங்கள் tw3262 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் இல்லை. இருந்த போதிலும் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட் டிவியாக tw3262 ஸ்மார்ட் டிவி உள்ளது.