போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது தற்போது சீனாவில் வெளியிடப்பட்டு உள்ளது. ட்ரூஃவைப் ப்ரோ என்று பெயர் கொண்ட இந்த இயர்பட்ஸ் ஆப்ட்எக்ஸ், ப்ளூடூத் 5.0, ஹை சென்சிட்டிவ் மைக், IPX7 சான்று, அல்ட்ரா லோ லேடென்சி ஆடியோ போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ட்ரூஃபைவ் இயர்பட்ஸ் குவால்காம் நிறுவனத்தின் கியூசிசி3020 சிப்செட் வசதி கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது ப்ளூடூத் 5 மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது. மேலும் இதில் ஆப்ட்எக்ஸ் கோடெக் சப்போர்ட் வசதி கொண்டுள்ளது.

இந்த இயர்போன் மென்மையான சிலிகான் இயர்பட்ஸ் கொண்டதாகவும், மேலும் இந்த இயர்போன் நியோடிமியம் டிரைவர்கள் கொண்டதாகவும் உள்ளது. இது பேசிவ் பைலேட்டரல் நாய்ஸ் ஐசோலேஷன் வசதியைக் கொண்டதாக உள்ளது.
போல்ட் ஆடியோ இயர்பட்ஸ் ஆனது 8 மணி நேரம் வரையில் பிளேபேக் கொண்டுள்ளது. மேலும் சார்ஜிங் கேஸ் செய்யும் போது 24 மணி நேரங்களுக்கு பேக்கப் கொண்டதாக உள்ளது.