ஆண்ட்ராய்டு போனில் இருக்கும் செயலிகள் எந்த அளவு பயன்பாட்டினைக் கொண்டுள்ளதோ, அதே அளவு பாதுகாப்பின்மையினைக் கொண்டதாக உள்ளது. இதனால் பயனர்கள் பெரிய அளவிலான அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கூகுள் பிளே ஸ்டோரில் பயனர்களின் விவரங்களை ரகசியமாக திருடும் அம்சங்கள் கொண்ட ட்ரோஜன் ரக செயலிகள் நிறைய உள்ளதாக அவாஸ்ட் சைபர்செக்யூரிட்டி நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது.

அதாவது இந்த செயலிகள் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளிலே இது தன் வேலையினைக் காட்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ட்ரோஜன் செயலிகள் ஸ்கிப் செய்ய முடியாத விளம்பரங்களைக் கொண்டதாகவும், மறைக்கப்பட்ட விளம்பரங்களைக் கொண்டதாகவும் உள்ளது. மற்ற நாடுகளில் இந்த செயலிகள் குறைந்த அளவே உள்ளதாகவும் கூறப்படுகிறது
இதனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது, மேலும் தற்போது இந்த செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து விரைவில் நீக்கப்படும் என்றும் தெரிகிறது.