Gadgets

சியோமி அறிமுகம் செய்துள்ள டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவி!!

சியோமி நிறுவனம் எம்ஐ டிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவியினை வெளியிட்டு உள்ளது. சியோமி நிறுவனம் எம்ஐ டிவி லக்ஸ் டிவியானது 55 இன்ச் எட்ஜ்-டூ-எட்ஜ் டிரான்ஸ்பேரன்ட் 4K OLED 10 பிட் பேனல் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இந்த டிவியானது, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது.மேலும் இது ஏஐ மாஸ்டர் ஸ்மார்ட் என்ஜின், மீடியாடெக் 9650 கஸ்டம் மேட் டிவி சிப், ஏஐ மாஸ்டர் ஆடியோ போன்ற அம்சங்களைக் கொண்டதாக இருப்பதால் சிறப்பான வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த சியோமி எம் ஐடிவி லக்ஸ் OLED டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவியானது  குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ73 மீடியாடெக் எம்டி9650 பிராசஸர் வசதியினையும், மாலி ஜி52 எம்சி1 ஜிபியு வசதியினையும் கொண்டுள்ளது.

சியோமி அறிமுகம் செய்துள்ள டிரான்ஸ்பேரன்ட் எடிஷன் டிவி!!

மேலும் இந்த டிவியானது புரொஃபஷனல் கேம் மோட், ஆட்டோமேடிக் லோ லேடென்சி மோட் கொண்டுள்ளது.

மெமரி அளவினைப் பொறுத்தவரை 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி போன்றவற்றினையும், மேலும் எம்யுஐ டிவியினையும் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத் 5, 3xஹெச்டிஎம்ஐ 2.1, 2x யுஎஸ்பி போன்றவற்றினையும், கூடுதல் சிறப்பம்சமாக  டால்பி அட்மோஸ், டிடிஎஸ் ஆடியோ கொண்டுள்ளது.

Related posts

சாம்சங் நிறுவனத்தின் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவி மாடல் வெளியானது!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியான சியோமி 75 இன்ச் ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil

இந்தியாவில் சிறப்பு அம்சங்களுடன் அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் அறிமுகம்!

TechNews Tamil