கொரோனா வைரஸ் உருவாகி 4 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் உலகம் முழுவதிலும் 27,66,611 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1,94,456 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கொரோனாவை எப்படியும் கட்டுப்படுத்தும் நோக்கில் உலகின் ஒவ்வொரு நாடுகளும் உலக சுகாதாரத்தின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது. கொரோனா ஓரளவு கட்டுக்குள் இருக்கக் காரணம் கொரோனா குறித்த விழிப்புணர்வினை தீவிரமாக உலக சுகாதார மையம் வாட்ஸ் ஆப், பேஸ்புக் எனப் பல தரப்பட்ட வகைகளிலும் ஏற்படுத்தியதே ஆகும்.
அந்தவகையில் தற்போது உலக சுகாதார மையம் வாட்ஸ் ஆப்புடன் இணைந்து வாட்ஸ் ஆப் `Together at home’ என்னும் புதிய ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது உலகில் உள்ள பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில் இந்த புதிய ஸ்டிக்கர்களானது அவர்களின் உணர்வுகளின் ஓட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சமூக இடைவெளியை கடைபிடித்தல், ஒற்றுமையுடன் கொரோனாவுக்கு எதிராகப் போராடுதல், ஏர் ஹை ஃபைவ் மற்றும் குரூப் வீடியோ காலிங், ஒகே, ஆர் யூ ஓகே, வைரஸினை உற்றுநோக்கல், கை கழுவுதல், வீட்டில் இருத்தல், வீட்டில் இருந்தே பணி புரிதல், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், உடற்பயிற்சி செய்தல் என்பது போன்ற பல்வேறு ஸ்டிக்கர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஸ்டிக்கர் பேக் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் கிடைக்கிறது. சேட் பாக்ஸில் உள்ள ஸ்டிக்கர் ஆப்ஷன் சென்று இந்த பேக்கை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.