Apps

டிக் டாக்கிற்கு அமெரிக்காவில் தடை இல்லை.. அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து இடைக்காலத் தடைவிதிப்பிற்கு ஆளாக்கப்பட்டாலும் அதற்கென தீவிர பயனர்கள் இருந்து வந்தனர்.

இந்தியாவில் டிக் டாக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவின் அனைத்து நிறுவனமும் பைட்டான்சுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க உள்ளது.

டிக் டாக்கிற்கு அமெரிக்காவில் தடை இல்லை..  அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை!!

பைட்டான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் முறிந்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்பதால் டிக் டாக் நிறுவனம் இதுகுறித்த விஷயங்களை ஆராய்ந்து அமெரிக்காவில் டிக்டாக்கின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக டிக்டாக் சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கையில், அதிபர் டிரம்ப்பின் உத்தரவிற்கு அமெரிக்க நீதிபதி இடைக்கால தடை விதித்து அறிவித்துள்ளார். அதாவது நவம்பர் மாதம் தேர்தல் முடிந்த பின்னர் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் நிலை ஏற்படும் என்று தெரிகிறது.

டிக் டாக் நிறுவனம் தடையில் இருந்து தப்பியதால், பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

Related posts

மளிகை பொருட்கள் வாங்க ஜியோவின் கேஷ்பேக் ஆப்பர்

TechNews Tamil

வாட்ஸ்அப் வெப் தளத்தில் அறிமுகமாகவுள்ள பேஸ் அன்லாக் அம்சம்!!

TechNews Tamil

Family Pairing: குழந்தைகளின் டிக் டாக் பயன்பாட்டினை கண்காணிக்க உதவும் அம்சம்!!

TechNews Tamil