2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி ஆகும், இந்த செயலியானது மிகப் பெரிய அளவில் வரவேற்பினைப் பெற்ற ஒரு செயலியாக இருந்துவருகிறது.
டிக் டாக் செயலியானது சீனாவினைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சுமார் 70 கோடி பயனர்களைக் கொண்டு, மிகக் குறுகிய காலத்தில் பலரால் பயன்படுத்தப்பட்டுவரும் செயலியாக இருந்து வருகிறது.

இளைஞர்களை மட்டுமன்றி சாதாரண குடும்ப உறுப்பினர்களையும் பயன்படுத்த தூண்டுவிதமாக இந்த செயலி அமைந்துள்ளது.
தற்போது இந்த செயலியானது ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களை தானாக சேகரித்து வந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 வெளியானதன் பின்னர் இந்த தகவல் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் இதுகுறித்துப் பேசியபோது, டிக்டாக் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் பயனர்களின் க்ளிப் போர்டு விவரங்களை இனி சேகரிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
ஐஒஎஸ் 14 பீட்டா பதிப்பானது, க்ளிப் போர்டில் இதுபோன்று தகவல்கள் திருடப்படுவதை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் அம்சத்தினைக் கொண்டது குறிப்பிடத்தக்கது.