2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து இடைக்காலத் தடைவிதிப்பிற்கு ஆளாக்கப்பட்டாலும் அதற்கென தீவிர பயனர்கள் இருந்து வந்தனர்.
இந்திய- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவியது. அந்தவகையில் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட 59 செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு இந்திய அரசுக்கு பரிந்துரை செய்ய, அதன்படி சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

அதாவது இந்திய மக்களின் தனியுரிமையினைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசு இதுகுறித்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தடைசெய்யப்பட்ட 59 செயலிகளில் டிக் டாக் செயலியும் ஒன்றாகும்.
இந்தியாவில் டிக் டாக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் லாக்டவுனுக்குப் பின்னர் டிக்டாக் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ள தனது அலுவலகத்தை திறந்தது.
மேலும் டிக் டாக்கில் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக பிரச்சினைகள் கிளம்ப ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இதுகுறித்து விசாரணை செய்த பின்னர், டிக் டாக் நிறுவனம் தகவல்களைத் திருடியது உண்மையானால் ஆஸ்திரேலியாவிலும் டிக் டாக் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.