Apps

அமெரிக்காவின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிக் டாக்!!

2016 ஆம் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்ட செயலி டிக் டாக் செயலி அவ்வப்போது அதிக அளவில் சர்ச்சைகளை சந்தித்து இடைக்காலத் தடைவிதிப்பிற்கு ஆளாக்கப்பட்டாலும் அதற்கென தீவிர பயனர்கள் இருந்து வந்தனர்.

இந்திய- சீனா எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் சீனப் பொருட்களைப் புறக்கணிப்பது குறித்த கருத்துகள் இந்தியாவில் நிலவியது. அதன்படி சீனாவின் 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட 59 செயலிகளில் டிக் டாக் செயலியும் ஒன்றாகும்.

அமெரிக்காவின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிக் டாக்!!

இந்தியாவில் டிக் டாக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக் டாக் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவின் எந்த நிறுவனமும் பைட்டான்சுடன் அனைத்து உறவுகளையும் துண்டிக்க உள்ளது.

பைட்டான்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தங்கள் முறிந்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும் என்பதால் டிக் டாக் நிறுவனம் இதுகுறித்த விஷயங்களை ஆராய்ந்து அமெரிக்காவில் டிக்டாக்கின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக டிக்டாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் டிக் டாக் அதன் சார்பில் சட்ட நடவடிக்கைகளுக்கான பணிகளை பின்புறத்தில் துவக்கி உள்ளது. டிக் டாக் போல் ஏற்கனவே அமெரிக்காவின் தடை உத்தரவை எதிர்த்து வீசாட் நிறுவனமும் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

அடுத்த அப்டேட்டில் தொழில்நுட்ப குறைபாடுகள் சரியாகும்.. சிக்னல் செயலி அறிவிப்பு!!

TechNews Tamil

கொரோனா வைரஸினைத் தடுக்கணும்.. ஃபேஸ்புக்குடன் பேச்சுவார்த்தை நடத்தும் ஐ.நா!!

TechNews Tamil

அமேசான் பார்மசி: மருந்து விற்பனைத் துறையில் கால் பதிக்க உள்ள அமேசான்!

TechNews Tamil