பேஸ்புக்கினை அடுத்து, அதிக அளவில் பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாக வாட்ஸ்ஆப் செயலி இருந்து வருகிறது.
போலியான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு வாட்ஸ் ஆப் ஒரு புதிய சேவையினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. அதாவது பார்வேர்ட் மெசேஜ்களுக்கு லென்ஸ் வடிவிலான ஒரு பட்டன் காண்பிக்கப்படும். அந்த லென்ஸ் வடிவை கிளிக் செய்து பார்த்தால் குறிப்பிட்ட பார்வேர்ட் மெசேஜ்ஜின் உண்மைத் தன்மை குறித்து தகவல்களை நம்மால் கண்டறிய முடியும்.
அந்த வகையில் வாட்ஸ் ஆப் தற்போது மற்றுமொரு அம்சத்தினை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே சாட்களை/ குறுந்தகவல்களை Forward செய்யும் வரம்பைக் கொண்டுவந்துள்ளது.

ஆனாலும் வாட்ஸ்ஆப் செயலியில் போலித் தகவல்கள் குறைந்தபாடில்லை. அதாவது வாட்ஸ் ஆப்பில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மூன்று புளூ டிக்கள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என்று தகவல்கள் பரவி வருகிறது.
அதிலும் இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தகவல் பரவியது.
ஆனால் இந்த குறுந்தகவல் முற்றிலும் போலி என பிஐபி எனப்படும் Press Information Bureau அறிவித்துள்ளது.
பிஜபி இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளதாவது, “வாட்ஸ்ஆப் செயலியில் புதிய டிக் எனப்படும் அதாவது மூன்று டிக்குகள் பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை. மேலும் அரசாங்கம் இதுபோன்று எந்தவிதமான கண்காணிப்பையும் செய்யவில்லை. இதனால் போலியான வதந்திகளை நம்பாதீர்கள்” என்று கூறியுள்ளார்.