Gadgets

இனி மொழிபெயர்ப்பு செய்ய இந்தக் கருவி போதும்..!!


பொதுவாக ஆப் மற்றும் கூகுள் வசதிகளை பயன்படுத்தி மொழிபெயர்ப்பு செய்யும் போது எப்படியும் சில சிக்கல்கள் வரும், ஆனால் இந்த கருவி துல்லியமான ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழி பெயர்ப்பு செய்து காட்டுகிறது. 


ஒரு மொழிக்காரர் பேசியதை ஒரே வினாடியில் மொழிபெயர்த்து, இன்னொரு மொழிக்காரருக்குப் புரியும் வகையில் பேசிக்காட்டும் சில கருவிகள் வந்துவிட்டது, ஆனால் லாங்கோகோ என்பவர் தயாரித்துள்ள ஜெனிசிஸ் என்ற கையடக்க மொழிபெயர்ப்பு கருவி சிறப்பாக உள்ளது.

தமிழ், ஹிந்தி மற்றும் இந்திய ஆங்கிலம் உட்பட 100மொழிகளில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மொழிபெயர்த்து, இனிய குரலில் பேசிக்காட்டுகிறது ஜெனிசிஸ்.

இனி மொழிபெயர்ப்பு செய்ய இந்தக் கருவி போதும்..!!

விமான நிலையத்துக்கு வழி கேட்பதிலிருந்து, அருகே நல்ல தங்கும் விடுதி, உணவகம் எங்கே இருக்கிறது என்பது வரை, சில வரிகள் முதல், பல பத்திகளுக்கு பேசி அடுத்த மொழிக்காரருடன் எளிதில் கருத்துப் பரிமாற லாங்கோகோ ஜெனிசிஸ் உதவுகிறது. 


குறிப்பாக வைஃபை வசதி கொண்ட இந்த மொழிபெயர்ப்புக் கருவிக்கு மூளையாக செயல்படுவது, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், இதுவும் லாங்கோகோவின் மேமக் கணினி இணைப்பும் இந்த கருவியின் பன்மொழிப் புலமையை தொடர்ந்து மெருகேற்றியபடியே இருக்கும். 


Related posts

முன்பதிவு செய்யாத பயணிகளுக்கான புதிய பயோமெட்ரிக் முறை அறிமுகம்!

TechNews Tamil

லெனோவோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள லீஜியன் 5 லேப்டாப்!

TechNews Tamil

இந்தியாவில் கோடக் நிறுவனத்தின் 42 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!

TechNews Tamil