உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் ஒன்று வாட்ஸ்ஆப். இந்தியாவில் கோடிக்கணக்கான வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உள்ளனர். வாட்ஸ் அப்பில் அடுத்தடுத்து புது அப்டேட் வந்த வண்ணம் உள்ளது.
தற்போது அப்படி என்ன அப்டேட் வந்துள்ளது என்று கேட்கிறீர்களா? வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது டார்க் தீம் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சேவையானது பலரும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சேவையாக உள்ளது. இந்த சேவையானது தற்போது அனைவருக்கும் பயன்படாமல் ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த புதிய டார்க் தீம் சேவை தற்போது ஆண்ட்ராய்டு v2.20.13 பீட்டா வெர்ஷனில் கிடைக்கிறது.
இந்த சேவையினை பயன்படுத்த வேண்டும் எனில், வாட்ஸ்அப் பீட்டா அப்டேட்டை முதல் கட்டமாக அப்டேட் செய்ய வேண்டும். அதன்பின்னரே இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
மேலும் இந்த டார்க் தீம் சேவையானது ஆண்ட்ராய்டு 9 தளத்தில் இயங்காது, இது ஆண்ட்ராய்டு 10 தளத்தில் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த சேவையினை பலரும் எதிர்பார்க்கையில் பலரும் ஃபேஸ்புக்கின் ஆண்ட்ராய்டு செயலியில் விரைவில் டார்க் மோட் வசதி வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.