Realme XT ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாகியது.
இந்த Realme XT ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான Realme UI அப்டேட்டைப் பெறத் துவங்கியுள்ளது.
இந்த அப்டேட் பல சிறப்புமிக்க அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அதாவது புதிய வடிவமைப்பு, சிறப்பான ஸ்கிரீன்ஷாட் அம்சங்கள், navigation சைகைகள் 3.0, புதிய focus mode போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னேப்டிராகன் 712 SoC ப்ராசஸரைக் கொண்டு இயங்கக்கூடியது.

இதனுடன் 6.4-இன்ச் AMOLED திரை கொண்டுள்ளது. சாஃப்ட்வேர் ரீதியாக, ஆண்ட்ராய்ட் 9 பையுடன் ColorOS 6 அமைப்பை கொண்டு செயல்படக்கூடியது.
மெமரியினைப் பொறுத்தவரை 8GB அளவு வரையிலான RAM, 128GB வரையிலான சேமிப்பு அளவுகளில் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை இந்த Realme XT ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது.
அதில், 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மற்ற மூன்று கேமராக்கள் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா போன்றவையும் உள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவும் உள்ளது.
பேட்டரியினைப் பொருத்தவரை 4,000mAh பேட்டரியினைக் கொண்டுள்ளது. வாட்டர்-ட்ராப் நாட்ச் முன்புறத்தினைக் கொண்டுள்ளது.