Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய அப்டேட் இதுதான்!!

கேலக்ஸி எஸ் 10 லைட் ஸ்மார்ட்போனுக்கு புதிய புதுப்பிப்பை சாம்சங் துவங்கியுள்ளது. இந்த அப்டேட்டில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 கிடைக்கச் செய்துள்ளது. புதிய மென்பொருள் அப்டேட் கேலக்ஸி எஸ் 10 லைட்டுக்கு டிசம்பர் 2020 செக்யூரிட்டி பேட்ச்சினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், பனாமா மற்றும் இந்தியாவில் தற்போதைக்கு இந்த அப்டேட்டினைக் கிடைக்கச் செய்துள்ளது.

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸ் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய அப்டேட் இதுதான்!!

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது, மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 10nmஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயங்கும் தன்மையானது.

இந்த ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 855 சிப்செட் கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் களம் இறங்கிய டெக்னோ ஸ்பார்க் 6 கோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

களமிறங்கத் தயார்நிலையில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் வெளியாகத் தயார்நிலையில் உள்ள விவோ Y31s ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil