கொரோனா வைரஸினால் 25,250 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ள நிலையில் இந்தியாவில் 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசு மார்ச் 24 மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை 144 தடைஉத்தரவினைப் பிறப்பித்தது. தற்போது இந்திய அரசு மீண்டும் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் முடிவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், அமேசான் இந்தியா மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான பொருட்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

இந்த சேவையானது கடந்த இரண்டு நாட்களாக அமலுக்கு வந்துள்ளது, அது குறித்த விவரங்கள் அமேசான் வலைதளத்திலும் வெளியாகியுள்ளது.
மக்களுக்கு மிகவும் முக்கியமான மருத்துவ சாதனங்கள், மக்களின் அன்றாடத் தேவைக்கான சமையல் பொருட்கள், ஆயத்தமான உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள், கிருமி நாசினிகள், கழிப்பறை சார்ந்த பொருட்கள், நோயாளிகளுக்கான மாத்திரைகள் போன்றவைகள் மட்டுமே தற்போதைக்கு விற்பனைக்கு கிடைத்துவருகிறது.
மேலும் இதேமாதிரியான பொருட்களையே பட்டியலாகக் கொண்டு ப்ளிப்கார்ட்டும் விற்பனை செய்து வருகிறது.