இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் ஜியோ நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது. இதற்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
சில தினங்களுக்குமுன் ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை
நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900
MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜிக்கு பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
இதன் முதற்கட்டமாக கொல்கத்தாவில் 3ஜி சேவை முழுமையாக நிறுத்தப்படுகிறது.

2ஜி சேவையில் எந்த மாற்றமும் இல்லாமல்
தொடர்ந்து வழங்கப்டும். 3ஜி சேவையை நிறுத்தப்படுவதால் பெரிய அளவுக்கு
பாதிப்பு ஏற்படுவதில்லை.
பெரும்பாலான மக்கள் பேசிக் மாடல் மொபைல் போன்களையே பயன்படுத்துகிற காரணத்தினால், 2ஜி சேவை
தொடர்ந்து வழங்கப்படும்போல் தெரிகிறது.
இதன்மூலம் 3ஜிக்கு செலவிடப்படும் செலவினங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. ஜியோவின் வருகையால் ஏர்டெல் நிறுவனம் நஷ்டத்தை நோக்கியே செல்கிறது.
தற்போது பி.எஸ்.என்.எல் 4ஜி சேவையை முழுமையாக கொண்டு வந்தால் ஏர்டெல் நிலைமை அதோ கதிதான். 3 ஜி சேவை தடை கொல்கத்தாவில் தொடங்கி ஒவ்வொரு நகரத்திலும் அமல்படுத்தப்படும்.
இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.