சியோமி நிறுவனம் இன்னும் 2 நாட்களில் அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி மி 10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது மி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் MIUI 11 அப்டேட்டை கொண்டு வரவுள்ளது. இந்த சியோமி மி 10 ப்ரோ M2001J1C கொண்ட எண் ஆகும்.

இந்த சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 2080 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் இது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. இந்த சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசதி கொன்டுள்ளது.
மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டிருக்கும்.
மெமரியினைப் பொறுத்தவரை 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. சியோமி மி 10ப்ரோ ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.
மேலும் இது யூ.எஸ்.பி-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஜிபிஎஸ், என்எப்சி, போன்ற இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது.