எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான அசுஸ் நிறுவனம் தற்போது மடிக்கக்கூடிய வகையிலான லேப்டாப்பினை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
அசுஸ் ஜென்புக் 17 போல்டு உலகின் முதல் 17.3 இன்ச் மடிக்கக்கூடிய ஓ.எல்.ஈ.டி லேப்டாப் மாடல்.
இந்த லேப்டாப் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் அளவு கொண்டுள்ளது. மேலும் இந்த லேப்டாப்பானது 2560×1920 பிக்சல் தீர்மானத்துடன் FOLED டிஸ்ப்ளே அளவு கொண்டுள்ளது.

பிராசஸர் என்று கொண்டால் இண்டெல் கோர் i7 பிராசஸர் மற்றும் இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் வசதி கொண்டுள்ளது.
மெமரி என்று கொண்டால் 16 ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 1 டிபி வரை சேமிப்பு அளவு கொண்டுள்ளது.
இயங்குதளமாக NVMe PCie 4.0 SSD விண்டோஸ் 11 ஹோம் / ப்ரோ வசதி கொண்டுள்ளது. அத்துடன் சாஃப்ட் கீபோர்டு மற்றும் 1.4mm கீ-டிராவல் அம்சம் கொண்டுள்ளது.
கேமரா அளவாக 5MP பிரைமரி கேமரா அளவு கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவாக வைபை 6E, ப்ளூடூத் 5.2, 2x தண்டர்போல்ட் 4 கொண்டுள்ளது.
ஆடியோ ஆதரவாக 1x 3.5mm காம்போ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது. பேட்டரி அளவாக 75 வாட் ஹவர் பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவாக 65 வாட் ஏசி அடாப்டர் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவாக யுஎஸ்பி டைப் சி அம்சம் கொண்டுள்ளது.