Apps

பேஸ்புக்கிற்கு 3 மில்லியன் டாலர்கள் கொடுக்கும் தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ப்ளூம்பெர்க்

உண்மையை பரப்புவதற்கு தான் கடுமையாக உழைக்க வேண்டும், பொய் தானாகவே பரவும் என்பதற்கான ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுகளை பேஸ்புக் தளத்தில் காணலாம். அந்த அளவிற்கு போலியான செய்திகள் மற்றும் தவறான தகவல்களால் நிரம்பி வழிகிறது முகநூல் பக்கங்கள். 


இதை மிகவும் தீவீரமான பிரச்சனையாக கையில் எடுத்துக்கொண்ட பேஸ்புக் நிறுவனம், போலி செய்திகளை ஒடுக்குவதற்கான மற்றும் தடுப்பதற்கான பல வழிமுறைகளையும், செயல்பாடுகளையும் கையாண்டு வருகிறது.

பேஸ்புக்கிற்கு 3 மில்லியன் டாலர்கள் கொடுக்கும் தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ப்ளூம்பெர்க்

அந்த வரிசையில், ‘நியூஸ் டேப்’ என்னு புதிய அம்சம் ஒன்று பேஸ்புக்கில் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த தகவலை பேஸ்புக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 


தனது பயனர்களுக்கு “நம்பகமான செய்திகளை” வழங்கும் நோக்கத்தின் கீழ் புதிய News Tab ஆனது இந்த ஆண்டு இறுதிக்குள் பேஸ்புக்கில் அறிமுகமாகும் என்று பேஸ்புக் கூறியுள்ளது.

பேஸ்புக்கில் வழியாக கிடைக்கும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்த புதிய டேப் ஆனது ஏற்கனவே பேஸ்புக்கில் இடம்பெற்று இருக்கும் நியூஸ் ஃபீட், மெசஞ்சர் மற்றும் வாட்ச் போன்ற பிரதான டேப்களுடன் இணைக்கப்படும் என்றும் பேஸ்புக் கூறியுள்ளது. 

தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ப்ளூம்பெர்க் போன்ற பல செய்தி நிறுவனங்கள், அவர்களின் செய்தி கட்டுரைகளுக்கு உரிமம் வழங்குவதற்காக, தங்களுக்கு ஆண்டுதோறும் 3 மில்லியன் டாலர்கள் வரை கொடுக்க தயாராக உள்ளதாக, சமீபத்தில் பேஸ்புக் தெரிவித்து இருந்தது. அதனை தொடர்ந்து தான் இந்த புதிய அம்சம் களமிறங்க உள்ளதாக நம்பப்படுகிறது. 



Related posts

அதிரடியாக ஆஃபர்களை அறிவித்து மக்களை உறையவைத்த ஃப்ளிப்கார்ட்!

TechNews Tamil

7 நாட்களுக்கு 7 ஜி.பி. டேட்டா வழங்கும் வோடபோன்

TechNews Tamil

அதிரடியான ஆஃபர்களுடன் Flipkart Month-End Mobiles Fest!

TechNews Tamil