Mobile

இன்று அறிமுகமானது Vivo Z1x மிட்-ரேன்ஜ்!

விவோ நிறுவனத்தின் Vivo Z1x ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 22.5W ஃப்ளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்துடன் கொண்ட 4,500 எம்ஏஎச் பேட்டரி, அதன் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே மற்றும் அதன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் போன்றவைகள் உள்ளன.


இந்தியாவில் விவோ இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போனை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி வகை ரூ.16,990 என்ற விலையிலும், அதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி வகை ரூ.18,990 என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

இன்று அறிமுகமானது Vivo Z1x  மிட்-ரேன்ஜ்!

விவோ இசட்1எக்ஸ் ஆண்ட்ராய்டு 9.0 ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 9.1 மூலம் இயங்குகிறது. மேலும் 6.38-இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி + (1080×2 340 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.


மேலும் 48 மெகாபிக்சல் அளவிலான சோனி ஐஎம்எக்ஸ் 582 சென்சார் + 8 மெகாபிக்சல் அளவிலான 120 டிகிரி வைட்-ஆங்கிள் (எஃப் / 2.2) + 2 மெகாபிக்சல் போர்ட்ரெயிட் லென்ஸ் (எஃப் / 2.4) போன்றவையும் உள்ளது. முன்பக்கத்தில், எஃப் / 2.0 லென்ஸ் கொண்ட ஒரு 32 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா உள்ளது.

மேலும் 4ஜி VoLTE, Wi-Fi 802.11ac, GPS / A-GPS, 3.5 மிமீ ஹெட்ஜாக் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற வசதிகளும் உள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

பட்ஜெட் விலையில் விற்பனையாகும் மோட்டோ ஜி6 பிளே!

TechNews Tamil

சீனாவில் 48எம்பி கேமராவுடன் ரெட்மி கே40எஸ் ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil