Mobile

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் விவோ இசெட்1எக்ஸ்.!

விவோ நிறுவனம் வரும் நவம்பர் 12 ம் தேதி விவோ இசெட்1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன், 6.8 இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 2340 x 1080 பிக்சல்கள் திர்மானம் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.

அசத்தலான அம்சங்களுடன் வெளியாகும் விவோ இசெட்1எக்ஸ்.!

கேமராவைப் பொறுத்தவரை விவோ இசெட்1எக்ஸ்  ஸ்மார்ட்போன் ஆனது பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் கேமரா, 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

 மேலும் இது 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், போன்றவற்றினையும் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, மேலும் இது வைஃபை, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவினைக் கொண்டு உள்ளது.

Related posts

ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் Huawei Y9s!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமாகியுள்ளது நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil