விவோ நிறுவனம் டிசம்பர் 16 ஆம் தேதி தனது விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 980 5ஜி சிப்செட் வசதி கொண்டதாகவும், இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடியதாகவும் உள்ளது.

மேலும் 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது, இது வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட போன்ற இணைப்பு ஆதரவுகளையும் கொண்டதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை இது பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி செகன்டரி சென்சார், 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் இது பின்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.