Mobile

மார்ச் 2 வது வாரம் புதிய அப்டேட்டுடன் வரவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்!

சாம்சங் இந்தியாவில் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுக்கு புதிய புதுப்பிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கலாம் என்றும், இந்த ஸ்மார்ட்போன் பல வகையான மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆனது, மார்ச் மாதம் 2 வது வாரத்தில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மார்ச் 2 வது வாரம் புதிய அப்டேட்டுடன் வரவுள்ள சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

1.         சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் 4GB RAM வகையின் விலை- ரூ. 12,999

2.         சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் 6GB RAM வகையின் விலை- ரூ. 16,999

சாம்சங் கேலக்ஸி எம்30எஸ்  ஸ்மார்ட்போன் 6.4 இஞ்ச் full-HD டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 1,080×2,340 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.

கேலக்ஸி எம்30ஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் சாம்சங் எக்ஸிநோஸ் 9611 பிராசஸர் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது ஏஆர்எம் மாலி ஜி72எம்பி3 ஜிபியு செயலி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி டெப்த் சென்சார் போன்ற கேமராக்களைக் கொண்டுள்ளது.

மேலும் முன்புறத்தில் 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போன் மெமரியினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 4ஜி வோல்ட்இ, வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றைக் கொண்டுள்ளது,

Related posts

ஜனவரியில் அறிமுகமாகவுள்ள கேலக்ஸி எம்31!

TechNews Tamil

ரூ. 36,990 என்ற விலையில் அசத்தலான அம்சங்களுடன் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil