புதிய iPad இந்தியாவில் விற்பனைக்கு வர, அனைவரும் அதன்மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம் iPhone 11 மற்றும் Apple Watch Series 5 இரண்டும் அறிமுகமானது.
கடந்த ஆண்டு மாடலின் மேம்பட்ட அம்சமாக மாற்றியமைக்கப்பட்டு, 10.2 inch iPad ஆக உள்ளது. மேலும் இது iPadOS மற்றும் A10 Fusion SoC கொண்டு இயங்கக் கூடியதாக உள்ளது.
iPad இரண்டு மாடல்களில் அறிமுகமானது
- Wi-Fi only
- Wi-Fi + Cellular மாடல்

Wi-Fi only:
- 32 ஜிபி சேமிப்பு வகையின் விலை -ரூ. 29,900,
- 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ. 37,900
Wi-Fi + Cellular :
- 32 ஜிபி சேமிப்பு வகையின் விலை -ரூ. 40,900,
- 128 ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ. 48,900
இது iPadOS கொண்டு இயங்குகிறது. மேலும் இது 10.2-இஞ்ச் டிஸ்பிளே கொண்டு, 2160×1620 பிக்சல்கள் தீர்மானத்துடன் உள்ளது. மேலும் இது Retina IPS display உடன் 264ppi pixel density கொண்டு உள்ளது.
M10 coprocessor உடன் Apple A10 Fusion SoC கொண்டு இயங்குகிறது.
இது f/2.4 aperture உடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது f/.2 aperture உடன் 1.2 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இது, 32Whr பேட்டரி மூலம் இயங்கும் தன்மையானது.
இந்த அம்சங்கள் வாடிக்கையாளர்கள் பலரைக் கவர்ந்துவருகிறது.