Apps

பிளிப்கார்ட்டில் துவங்கிய ரியல்மீ 5 Pro இன் அதிரடியான விற்பனை!

ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போன்கள், புது டெல்லியில் நேற்று அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் விலை, பட்ஜெட் விலையாக இருப்பதால் மக்கள் பலரும் இதனை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரியல்மீ 5 Pro ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடலான 4GB RAM/ 64GB சேமிப்பு வெர்சன் 13,999 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இதுமட்டுமின்றி இரண்டு வகைகளில் இந்த ஸ்மார்ட்போனில், 6GB RAM/ 64GB சேமிப்பு வகை 14,999 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM/ 128GB சேமிப்பு வகை 16,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

பிளிப்கார்ட்டில் துவங்கிய ரியல்மீ 5 Pro இன் அதிரடியான விற்பனை!

6.3-இன்ச் full-HD+ (1080×2340 பிக்சல்கள்) திரையை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3+ பாதுகாப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னேப்ட்ராகன் 712 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. 

ரியல்மீ 5 Pro ஸ்மர்ர்ட்போன் 4G VoLTE, வை-பை 802.11ac, ப்ளூடூத் v5.0, a GPS/ A-GPS, 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் USB டைப்-C சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் 4,035mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும், இதனுடன் VOOC 3.0 அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. 

Related posts

வாட்ஸ் ஆப் போல் ட்விட்டரில் அனைவரும் எதிர்பார்த்த ஸ்டோரி வசதி!!

TechNews Tamil

டிக்டாக் செயலியில் வரவிருக்கும் புதிய அப்டேட்!

TechNews Tamil

தற்போது கூடுதலாக 40 நகரங்களில் ஜொமாட்டோ வசதி!

TechNews Tamil