Mobile

டெக்னோ ஸ்பார்க் ஏர் ஸ்மார்ட்போனின் அதிரடியான அம்சங்கள்!!


டெக்னோ ஸ்பார்க் தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த வரிசையின்கீழ் 2 புதிய மாடல்கள் வெளியாகி உள்ளன அவை ஸ்பார்க் கோ மற்றும் ஸ்பார்க் ஏர். 


டெக்னோ ஸ்பார்க் ஏர் ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்ப்ளே, 19.5: 9 என்கிற திரை விகிதத்தினைக் கொண்டுள்ளது. மேலும் 2GHz க்வாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 ப்ராசஸர் கொண்டு இயங்குகிறது. 

3 ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான சேமிப்பு அளவினைக் கொண்டுள்ளது. 256 ஜிபி வரை மெமரியினைக் கொண்டுள்ளது.

டெக்னோ ஸ்பார்க் ஏர் ஸ்மார்ட்போனின் அதிரடியான அம்சங்கள்!!

ஸ்பார்க் ஏர் ஆனது ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான HiOS 5.0 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. 

ஸ்பார்க் ஏர் பின்புறத்தில், டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 13MP அளவிலான முதன்மை சென்சார் உடனாக எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட விஜிஏ கேமரா ஒன்றை கொண்டுள்ளது.

முன்பக்கத்தில், எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 எம்பி அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக பின்புற கைரேகை சென்சார் ஆனால் ஃபேஸ் அன்லாக் 2.0 உள்ளது. இது ஒரு 3,000 எம்ஏஎச் பேட்டரியினையும் கொண்டுள்ளது.

Related posts

அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகமாகும் Oppo Reno Ace!!

TechNews Tamil

மீண்டும் விற்பனைக்கு வந்த Redmi Note 8!

TechNews Tamil

புதிய அப்டேட் பெற்றுள்ள கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil