OnePlus 7T ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வெளியாகிய வண்ணமே உள்ளன. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனில் என்ன சிறப்பம்சங்கள் இருக்கும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்து வருகிறது.
நேற்று இதுகுறித்த உறுதியான தகவல்கள் வெளியாகின. அதாவது ஒன்பிளஸ் 7 ப்ரோவின் 90 ஹெர்ட்ஸ் க்வாட் எச்டி+ அமோலேட் பேனல் 7டி ஸ்மார்ட்போனிலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது பலரையும் நிச்சயம் கவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதன் விலை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான்நிலையில், ஒன்ப்ளஸ் 7 ப்ரோவை விட விலை குறைந்து இருக்கும் என்று நிறுவனத்தின் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதனுடன் 7டி ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் உள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக மென்மையான ஸ்க்ரோலிங் கொண்ட டிஸ்பிளேவும் இருக்கும் .
மேலும் க்வாட் எச்டி+ ஆப்டிக் அமோலேட் பேனல் போன்றவையும் இருக்கும்,
மேலும் இது ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் கொண்டு செயல்படும்.
ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன்களை இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாகி, விற்பனையானது துவங்கப்படும் என்று தெரிகிறது.