Information Technology

இரண்டாம் கட்ட ஊரடங்கு… மே 5 ஆம் தேதி வரை வேலிடிட்டியினை நீட்டித்த பிஎஸ்என்எல்!!

கொரோனா வைரஸினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கம் முதல் கட்டமாக மார்ச் 24 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 15 வரை ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக ஊரடங்கினை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்ய ஆன்லைன் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள் பலருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜுக்கான வேலிடிட்டி காலத்தை ஏப்ரல் 20 வரை நீட்டிப்பதாக அறிவித்து இருந்தது.

இரண்டாம் கட்ட ஊரடங்கு… மே 5 ஆம் தேதி வரை வேலிடிட்டியினை நீட்டித்த பிஎஸ்என்எல்!!

இதன் மூலம் இன்கமிங் அழைப்புகளைத் தடையில்லாமல் பெற முடியும். மேலும் கால் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 10 இலவச டாக்டைம் வழங்குகிறது.

தற்போது ஊரடங்கு நீட்டிகப்பட்ட நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரீசார்ஜுக்கான வேலிடிட்டி காலத்தை மே 5 ஆம் தேதி வரை நீட்டித்து இன்கமிங் அழைப்புகளைத் தடையில்லாமல் பெற உதவி செய்தல், ரூ. 10 இலவச டாக்டைம் போன்றவற்றினை வழங்க உள்ளது.

இந்த அறிவிப்பினை பிஎஸ்என்எல் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Related posts

999 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்!

TechNews Tamil

BSNL-இல் தினசரி 10GB 4G டேட்டா!

TechNews Tamil

பாஸ்டேக் வைத்துள்ளவர்களுக்கும் இரண்டு மடங்கு கட்டணம்… அதிர்ச்சி தகவல்!!

TechNews Tamil