சாம்சங் நிறுவனம் உலகின் முதல் மடக்கு போனான சாம்சங் கேலக்ஸி ஃபோல்டினை இந்தியாவில் அக்டோபர் மாதம் 1ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த போனின் விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என்ற தோராய விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேமரா:
மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது 16 எம்.பி. அல்ட்ரா வைட் சென்சார், 12 எம்.பி. வைட் சென்சார், 12 எம்.பி. டெலிபோட்டோ சென்சார், 10 எம்.பி. முதன்மை கேமராவும், 8 எம்.பி. டெப்த் சென்சார், 10 எம்பி செல்ஃபி கேமரா போன்றவற்றினையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் முழு அமைப்பாக பார்த்தால் 7.3 இன்ச் அளவையும், இரண்டாக மடிக்கும் போது 4.6 இன்ச் டிஸ்பிளேவையும் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855வை கொண்டுள்ளது.
சேமிப்பு அளவினைப் பொறுத்தவரை 12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜை கொண்டிருக்கும். மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஆண்ட்ராய்ட் 9.0 இயங்குதளம் கொண்டு இயங்கும் தன்மையானது.
இதன் பேட்டரியின் சக்தியூட்டக்கூடிய அளவு 4380mAh ஆகும்.