ஜியோ, அவுட்கோயிங்க் காலுக்கு காசினை வசூலிக்க இதனால் பயனர்கள் பலரும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு போர்ட் செய்து வருகின்றனர். ஏர்டெல் வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற மற்ற நெட்வொர்க்குகள் ஆஃபர்களை வாரி இறைத்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.
அந்தவகையில் ஜியோ தற்போது அதன் ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டத்தை திருத்தியுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக 300 நிமிடங்கள் பேசிக் கொள்ளலாம்.
இதன் ரூ. 149 ப்ரீபெய்ட் வேலிடிட்டி 28 நாட்களுக்கு பதிலாக 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ரூ. 149 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் ஜியோ கால்ஸ், 300 நிமிட மற்ற நெட்வொர்க் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், தினசரி நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 24 நாட்கள் செல்லுபடி போன்றவற்றை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அனைத்து மொபைல் குரல் அழைப்புகளிலும் 6 பைசா / நிமிட கட்டணம் மற்ற ஆபரேட்டர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
மேலும் இந்தத் திட்டங்கள் ரூ. 222, ரூ. 333, ரூ. 444, மற்றும் ரூ. 555 என்ற விலைகளில் கிடைக்கிறது.