Mobile

ரூ.47,900 அறிமுகமானது ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன்!

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  1. ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வகையின் விலை – ரூ.47,900 (இந்திய மதிப்பு)

ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளேவினையும் மற்றும் 1080பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

பாதுகாப்பு வசதியைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியினக் கொண்டுள்ளது.

ரூ.47,900 அறிமுகமானது ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன்!

மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 5ஜி பிராசஸர் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதி கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை இந்த ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும், முன்புற்த்தில் 20எம்பி பாப்-அப் செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இந்த ரெட்மி கே30 ப்ரோ ஜூம் எடிஷன் ஸ்மார்ட்போன் 4700எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 802.11, புளூடூத் 5.1, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், டூயல் சிம், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

சர்வதேச சந்தையில் அறிமுகமாகவுள்ள போக்கோ எம் 3 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மூன்றாவது ஃபிளாஷ் சேல்: ரூ.1,334 என்ற மாதத் தவணையில் போக்கோ எக்ஸ்2!!

TechNews Tamil

மீண்டும் விற்பனைக்கு வந்த Redmi Note 8!

TechNews Tamil